மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாளை வெளியாகிறது விஜய் ஆண்டனியின் ரோமியோ பட ஸ்னீக் பீக் காட்சிகள்; படக்குழு அறிவிப்பு.!
விநாயக் வைத்யநாதன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் ஆண்டனி, மிர்னாலி ரவி, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா மற்றும் ஸ்ரீஜா ரவி உடபட பலர் நடிக்க வெளியாகவுள்ள திரைப்படம் ரோமியோ (Romeo Vijay Antony Movie).
படம் ஏப்ரல் 11ம் தேதியில் திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் நாளை மாலை 05:01 மணியளவில் வெளியிடப்படும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைலர் போஸ்டரில் முதலிரவு அறைக்குள் இருவரும் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. அந்த வகையில், ஸ்னீக் பீக் காட்சிகள் எப்படி அமையப்போகிறது? என்பதை எதிர்பார்க்கவைத்து இருக்கிறது.