திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
10 வருடங்களாக அவதிப்படும் பொதுமக்கள்.! சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை வைக்கும் விஜய் மக்கள் இயக்கம்.!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையின் இடதுபுறம் பிணவறை வழியே வெட்டன்விடுதி சாலையை இணைக்கும் சாலை மிகவும் மோசமாக உள்ளநிலையில் அதனை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
அந்த சாலை மோசமாக இருப்பதால் வெட்டன்விடுதி, பாச்சிக்கோட்டை, ராசியமங்களம், பாப்பான்விடுதி மற்றும் அதை சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து அவசர சிகைச்சைகாக வரும் மக்கள் 2நிமிடத்தில் மருத்துவமனையை அடையமுடிந்த இந்த சாலை சரியில்லாத காரணத்தால் 10நிமிடத்திற்கும் மேல் சூற்றிவந்து சிகிச்சை பெறவேண்டிய அவலநிலை நீடிப்பதாக கூறுகின்றனர்.
இதுக்குறித்து இப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும், அந்த சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். இந்தநிலையில் ஆலங்குடி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள், ஆலங்குடி தொகுதி MLAவும், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதன் அவர்களிடம் பொதுமக்களின் நலனுக்காக விரைவில் இந்த சாலையை சீரமைத்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.