திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிரித்த முகத்துடன் விஜயகாந்த்; மகிழ்ச்சியில் ஆட்பறித்த தொண்டர்கள்.. காரணம் என்ன?.!
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராகவும், அரசியலில் தமிழகத்திற்காக குரல் கொடுத்து இன்று உடல் நலக்குறைவால் ஓய்வெடுக்கும் தன்னலமற்ற தலைவராக இருப்பவர் விஜயகாந்த்.
திரைத்துறையில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து மக்களுக்காக உழைக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கிய விஜயகாந்த், அரசியலில் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றி, பின் காலசூழ்நிலை மற்றும் உடல்நிலை காரணமாக தற்போது வீட்டில் இருந்தபடி மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
முற்றிலும் மெலிந்த தேகம், நலிந்த குரல் என கேப்டனை எப்படி ஒவ்வொருவரும் பார்த்து ரசித்தார்களோ அவை அனைத்தையும் உடல் நலக்குறைவால் இழந்து தற்போது வாழ்ந்து வருகிறார். தனது மனைவி பிரேமலதா மற்றும் மகன்களின் அன்பான அரவணைப்பு, கவனிப்பின் மூலமாக அவர் அவ்வப்போது அரசியல் பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார்.
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்🎉🎊#MerryChristmas #கிறிஸ்துமஸ் pic.twitter.com/fxrQaliAYC
— Vijayakant (@iVijayakant) December 25, 2023
இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை பதிவேற்றி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதனைக் கண்ட அவரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இப்படியான ஒரு நிலையில் நீங்கள் கட்டாயம் மீண்டு வரவேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.