மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தையே உலுக்கிய மாணவர் கொலை விவகாரம்.. உச்சகட்ட வேதனையில் விஜயகாந்த்.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல், பள்ளக்கால் பொதுக்குடி பள்ளியில் பயின்று வந்த 12 ஆம் வகுப்பு மாணவர் செல்வ சூர்யாவிற்கும், 11 ஆம் வகுப்பு மாணவருக்கும் இடையே பிரச்சனை நடந்துள்ளது.
இந்த வாக்குவாதத்தில் செல்வ சூர்யாவை எதிர்தரப்பு மாணவர்கள் 3 பேர் கற்களால் தாக்க, படுகாயமடைந்த சூர்யா திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசாரணையில், மாணாக்கர்களின் கையில் ஜாதி கயிறு கட்டுவது குறித்த தகராறு கொலையில் முடிந்தது அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக 3 மாணவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், "பள்ளியில் பள்ளிப்பருவத்தில், ஜாதிக்காக மாணவனை தாக்குவது அபாயகரமானது, அதனால் நிகழ்ந்துள்ள கொலை கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.