தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கிணற்றை காணோம் என்ற வடிவேலு வசனம் மாதிரி, கிராம நிர்வாக அலுவலரை தேடும் கிராம மக்கள்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா புதுக்கோட்டை விடுதி ஊராட்சி மற்றும் பள்ளத்திவிடுதி கிராமநிர்வாக அதிகாரியை தேடி திரிவதே எங்களது வேலையாக உள்ளது என கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா புதுக்கோட்டை விடுதி ஊராட்சி மற்றும் பள்ளத்திவிடுதி கிராமநிர்வாக அலுவலகம் 24மணிநேரமும் பூட்டியே கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் தினம் தினம் அவதிபட்டு வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்மட்டும் தான் உள்ளது அதுவும் பூட்டிய படியே உள்ளது. இதனால் கிராம நிர்வாக அதிகாரியை தேடுவதே எங்களது வேலையாக உள்ளது. இதனால் சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஊர்மக்கள் கோரிக்கை வைக்கின்றோம்.
இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றால் விரைவில் போராட்டம் நடத்த தயாராக உள்ளதாக பொதுமக்கள் குமுறுகின்றனர். இந்த இரண்டு ஊராட்சிகளிலும் ஏராளமான விவசாயிகள் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் தங்களது அணைத்து வேலைகளையும் விட்டுவிட்டு கிராம நிர்வாக அதிகாரிகளை தேடுவதையே வேலையாய் வைத்து அலைந்து திரிகின்றனர். இந்தநிலையில் இவர்களது கோரிக்கைக்கு சில அரசியல் கட்சிகளும் இணைந்து போராட தயாராக உள்ளனர்.