மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாணவர்களுக்கிடையே இருதரப்பு மோதல்; பள்ளி வளாகத்தில் ஊராட்சிமன்ற தலைவரின் ஆதரவாளர்கள் தாக்குதல்.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, நெகனூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
இதற்கிடையில், பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து மோதல் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 மாணவர்களை நெகனூர் ஊராட்சிமன்ற தலைவர் ஜெய்சங்கர் மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், கவுன்சிலர் பிரபாகரன் ஆகியோரின் ஒத்துழைப்புடன், இவர்களின் தூண்டுதலின் பேரில் 10 பேர் பள்ளி வளாகத்தில் புகுந்து உதவி தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாணவர்கள் நால்வரையும் சாதி ரீதியாக திட்டி தாக்கி இருக்கின்றனர்.
இதனால் காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.