#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
17 வயது சிறுமி 3 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. கிழட்டு காமுகன், 2 இளைஞர்கள் கைது..!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, ஈச்சங்குப்பம் கிராமத்தை சார்ந்த 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, தனது தாய் - தந்தையை இழந்து, பெரியம்மா பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இவர் விக்கிரவாண்டி அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
கால்-கைகளில் வலி ஏற்பட்டுள்ளதாக கூறி அலறித்துடித்த மாணவியை மீட்ட உறவினர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மாணவியின் வயிறு சந்தேகத்திற்கு இடமான வகையில் பெரிதாக இருந்ததால், மருத்துவர்கள் சிறுமிக்கு பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது, சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள், உறவினர்களுக்கு விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளனர். சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து அவர்களிடம் கூறவே, செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், சிறுமியின் பெரியம்மா மகன் மோகன் (வயது 32), வெங்கடேசன் (வயது 80), இளையராஜா (வயது 28) ஆகியோர் சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் மாணவி கர்ப்பமானது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, மூவரின் மீதும் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.