திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் இரயில் எஞ்சின் முன்பாய்ந்து தற்கொலை.. உடல் துண்டாகி பலியான உயிர்.!
கொரோனாவால் வருமானம் இழந்து, கடன் தொல்லையால் தவித்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மருதூர், மேல் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரின் மகன் பிரகாஷ் (வயது 40). இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். கொரோனா கலாட்டத்தில் போதுமான வருமானம் இன்றி வாடிய நிலையில், அவரின் குடும்பமும் வறுமையில் தவித்து வந்துள்ளது.
குடும்பத்தின் வறுமையை சமாளிக்க பிரகாஷ் கடன் வாங்கியிருந்த நிலையில், தற்போதும் வருமானம் குறைந்தளவே கிடைத்ததால் கடனை அடைக்க இயலவில்லை. அவரிடம் கடன் கொடுத்த பலரும், பணத்தை திருப்பி கேட்டு வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த பிரகாஷ், தற்கொலை செய்துகொள்ளும் விபரீத எண்ணத்திற்கு சென்றுள்ளார்.
நேற்று பகல் 12 மணியளவில் விழுப்புரம் இரயில்வே தண்டவாளத்திற்கு அருகே சென்று கொண்டு இருந்த பிரகாஷ், அவ்வழியாக வந்த இரயில் எஞ்சினில் தலைவைத்து படுத்து தற்கொலை செய்துகொண்டார். எஞ்சின் மட்டும் இயக்கப்பட்டு வந்ததால், ஓட்டுநர் இரயிலை நிறுத்த முயற்சித்தும் பலனில்லை. இதனால் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக விழுப்புரம் இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடன் சுமையால் பிரகாஷ் தற்கொலை செய்துகொண்டது அம்பலமானது. தற்கொலை செய்துகொண்ட பிரகாஷுக்கு லலிதா என்ற மனைவியும், யுவன் ராஜா என்ற 15 வயது மகனும், பிரவீன் ராஜா என்ற 12 வயது மகனும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.