மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவி தற்கொலை முயற்சி.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை., விக்ரவாண்டியில் பரபரப்பு..!
விக்கிரவாண்டி அருகேயுள்ள சூர்யா கல்வி குழுமத்தில் பாராமெடிக்கல் துறையில் பயின்று வந்த ரம்யா என்ற மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சில நாட்களாகவே பள்ளி, கல்லூரிகளில் மாணவ - மாணவிகளின் தற்கொலை என்பது அதிகரித்து வருவது அதிர்வலைகளை பதிவு செய்துள்ளது. கள்ளக்குறிச்சியில் தொடங்கி இன்று காலை திருத்தணி வரை மாணவிகளின் மரணம் தொடர்கிறது. இந்நிலையில், விக்கிரவாண்டி தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் தனியார் பாராமெடிக்கல் கல்லூரியானது செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதல் ஆண்டு பாராமெடிக்கல் துறையில் பயின்று வரும் மாணவி ரம்யா. இன்று வழக்கம்போல கல்லூரிக்கு வருகை தந்த மாணவி, திடீரென கல்லூரியின் முதல் தலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கீழே விழுந்த மாணவி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடவே, அவரை மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர் சிகிச்சைக்காக அரசு முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் நேரில் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.