திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆஸ்திரேலியாவிடம் பட்ட அசிங்கம்.! எங்கள் தோல்விக்கு இது தான் காரணம்! வேதனையுடன் விராட் கோலி.!
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில் T20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளும் டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 244 ரன்கள் இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 191 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட்டாக, அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி களமிறங்கியது.
ஆனால், இந்திய அணி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், வெறும் 36 ரங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் மூலம் 90 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிலும் இந்திய அணி வீரர்கள் வெறும் 36 ரன்னிற்கு 9 விக்கெட்டுகளை இழந்தது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
இந்த போட்டி முடிந்தபிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசுகையில், வெறும் வார்த்தைகளுக்குள் இந்த உணர்வை வெளிப்படுத்துவது மிகவும் கஷ்டம். 60 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய எங்கள் பேட்டிங் ஆர்டர் அப்படியே சரிந்துவிட்டது. இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டத்தை வெறும் ஒரு மணி நேரத்தில் வீணடித்து விட்டோம்.
மிகுந்த வேதனையாக உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே இன்னும் மாற்றமும், முன்னேற்றமும் தேவை. நாங்கள் கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்பதை இந்த டெஸ்ட் போட்டி உணர்த்தியுள்ளது. இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த டெஸ்டில் எங்கள் வீரர்கள் வலுவாக மீண்டெழுவார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.