திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனந்திருந்தி கணவருடன் செல்ல முயன்ற கள்ளக்காதலி மர்ம கொலை; கள்ளக்காதலன் தலைமறைவு.. விருதுநகரில் அதிர்ச்சி.!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர், ஊத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரின் மனைவி ராஜேஸ்வரி. தம்பதிகளுக்கு மகன், மகள் ஆகியோர் இருக்கின்றனர்.
தம்பதிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சங்கரநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவரோடு ராஜேஸ்வரிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் வாடகை வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.
சம்பவத்தன்று முத்துப்பாண்டி தனது மனைவி ராஜேஸ்வரியிடம் நேரில் சென்று சமாதானம் பேசியுள்ளார். இதனால் அவர் மனம் ஒத்துபோய் கணவருடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த நிலையில், பரமசிவம் என்ன செய்வது? என்று தெரியாமல் இருந்துள்ளார்.
இதற்கிடையில் இன்று காலை ராஜேஸ்வரி கழுத்து அறுபட்ட நிலையில் இறந்துகிடந்துள்ளார். அப்பகுதியினர் இதுகுறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கவே, இராஜேஸ்வரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து முத்துப்பாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் பரமசிவத்துக்கும், ராஜேஸ்வரிக்கும் கள்ளதொடர்பு இருந்தது தெரிய வந்த நிலையில், பரமசிவம் ராஜேஸ்வரியை கழுத்தறுத்து கொலை செய்து தலைமறைவாய் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. பரமசிவமும் காவல்துறையினருக்கு சந்தேகம் அளிக்கும் வகையில் தலைமறைவாகியுள்ளதால் அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.