பாசக்கார மனைவியின் மீது சந்தேக பொல்லாப்பு... இரத்த வெள்ளத்தில் கதறித்துடிக்கவிட்ட கணவன்..!



Virudhunagar Bank Employee Kills Wife Due to Doubts

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ காலனி, கம்பர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). இவரின் மனைவி கற்பகம் (வயது 30). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 10 வருடங்கள் ஆகிறது. தம்பதிகளுக்கு 5 வயதுடைய மற்றும் ஒன்றரை வயதுடைய குழந்தைகள் உள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள வங்கியில் கண்ணன் வாங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கண்ணனின் தந்தை கிருஷ்ணன் இறந்துவிட்டதை தொடர்ந்து, கண்ணனுக்கு கருணை அடிப்படையில் பணி கிடைத்துள்ளது. தினமும் விருதுநகரில் இருந்து திருமங்கலம் சென்று பணியாற்றி வரும் கண்ணனுக்கு, மனைவி கற்பகத்தின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் தம்பதிகளிடையே அவ்வப்போது தகராறு நடந்து வந்த நிலையில், இன்று காலையும் இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. 

அப்போது, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கண்ணன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். கற்பகம் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக துடிதுடித்து பலியாகியுள்ளார். 

Virudhunagar

வீட்டில் இருந்த குழந்தைகள் இருவரும் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், கண்ணன் பாண்டியன் நகர் காவல் நிலையத்திற்கு சென்று தகவலை தெரிவித்து சரணடைந்துள்ளார். காவல் துறையினர் கண்ணனின் வீட்டிற்கு சென்ற பின்னர் தான், இந்த விஷயம் அக்கம் பக்கத்தினருக்கே தெரியவந்துள்ளது. 

கற்பகத்தின் உடலை மீட்ட காவல் துறையினர், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சந்தேகத்தால் மனைவியை கொலை செய்ததாக கண்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.