96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
முன்விரோதத்தில் பேருந்து ஓட்டுநர் கொலை; 4 பேர் கும்பல் கைது.. சிவகாசியில் பரபரப்பு.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் சுரேஷ், கடந்த 5 ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலை வழக்கில் 4 பேர் கைது:
மேலும், கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில், இக்கொலை விவகாரத்தில் பாலா கணேஷ் (28), நந்தகுமார் (26), கார்த்தீஸ்வரன் (21), பழனி (28) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
முன்விரோதத்தால் நடந்த சோகம்:
இவர்களிடம் நடந்த விசாரணையில் முன்பகை காரணமாக கொலை நடந்தது உறுதியானது. இவர்களை கைது செய்ய சென்றபோது, பாலா கணேஷ் தப்பிச்செல்ல முயற்சித்து கீழே விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டார். அவருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டது.