ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பட்டாசு ஆலை வெடித்து சிதறி துயரம்; 4 பேர் பலி., 10 பேர் படுகாயம்.. விருதுநகரில் சோகம்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, செங்கமலபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
வெடித்து சிதறிய பட்டாசு ஆலை:
இன்று வழக்கம்போல பணியாளர்கள் தங்களின் வேலைகளை கவனித்து வந்த நிலையில், திடீரென ஆலை வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில், வேலையில் இருந்த 4 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர்.
10 பேர் படுகாயம், 4 பேர் பலி:
மேலும், 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த காரணத்தால், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.