மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: பட்டாசு ஆலை வெடித்து சிதறி பயங்கர விபத்து; 5 பேர் உடல் சிதறி பரிதாப பலி.!
புகைப்படம்; மாறனேரி பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர், எம்.புதுப்பட்டி, ரங்கபாளையம் பகுதியில் கனிஷ்கர் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையின் உரிமையாளராக சுந்தரமூர்த்தி என்பவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இன்று வழக்கம்போல பணியாளர்கள் வேலைபார்த்துக்கொண்டு இருந்த நிலையில், திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பணியாளர்கள் 5 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, மாறனேரி பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருவேறு இடங்களில் அடுத்தடுத்து பட்டாசு ஆலை விபத்துகள் நடந்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.