மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குளிர்பானம் குடித்த சிறுவன் பேருந்து பயணத்திலேயே மரணம் - நெஞ்சை உலுக்கும் சோகம்.. பதறவைக்கும் சம்பவம்.!
உணவு இடைவேளைக்காக பேருந்து நிறுத்தப்பட்ட இடத்தில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பானம் குடித்த சிறுவன் பரிதாபமாக பலியாகினான். சிறுவனின் மரணத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வசித்து வருபவர் ஜெபசின் ராஜ். இவரின் மனைவி, மகள், மகன் ஆகியோருடன் சம்பவத்தன்று ஜெபசின்ராஜ் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூரில் நடந்த திருவிழாவுக்கு வந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, சென்னை நோக்கிய பேருந்தில் மீண்டும் அவர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அழகாபுரி அருகே பேருந்து உணவகத்தில் நின்றுள்ளது. அப்போது, சிறுவனுக்கு குடிக்க அரைலிட்டர் குளிர்பானம் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.
குளிர்பானத்தை குறித்துவிட்டு பேருந்தில் ஏறிய சிறுவனுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டுள்ளது. சாதாரண பேருந்து பயண வாந்தியாக இருக்கலாம் என்று எண்ணி சிறுவனை உறங்கவைத்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மீண்டும் பேருந்து மற்றொரு உணவகத்தில் நின்றுள்ளது.
அங்கு சிறுவனை குடும்பத்தினர் எழுப்பியும் விழிக்காததால், அங்கிருந்த மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதனை சேய்த மருத்துவர், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.