பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சிறுமிக்கு தாயின் உடந்தையுடன் பாலியல் தொல்லை.. பதறவைக்கும் சம்பவம்.. அதிர்ச்சி செயல்.!
தாயின் ஆதரவுடன் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமியின் தாய் மற்றும் தாயின் ஆண் நண்பர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு கீழத்தெருவில் வசித்து வரும் சிறுமிக்கு, தாயின் உடந்தையுடன் வாலிபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக, குழந்தைகள் நல அமைப்பின் 1098 அலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து, விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜானகி, வத்திராயிருப்புக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
விசாரணையில், சிறுமியின் தந்தை இறந்துவிட்ட நிலையில், சிறுமியின் தாய் பூபதிக்கும் - கூனம்பட்டியை சேர்ந்த பாண்டிமுருகன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், பூபதியின் மகளுக்கு பாலியல் ரீதியாக பாண்டிமுருகன் தொல்லை கொடுக்க தொடங்கி இருக்கிறான்.
இதனை மகள் தாயிடம் தெரிவிக்கவே, பாண்டிமுருகனுக்கு ஆதரவாக பேசிய பூபதி, தனது மகளை அடித்து காயப்படுத்தி விஷயத்தை வெளியே கூற கூடாது என மிரட்டி இருக்கிறார். இதனையடுத்து, வத்ராப் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சிறுமியின் தாய் பூபதி மற்றும் பாண்டிமுருகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.