கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
6 வயது மகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை; காப்பாற்றச்சென்றவர் படுகாயம்.. விருதுநகரில் கண்ணீர் சோகம்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல், பள்ளப்பட்டி முத்து மாரியம்மன் காலனி பகுதியை சார்ந்தவர் அக்னி புத்திரன். இவரின் மனைவி மருதவள்ளி. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்ற முடிந்துள்ளது.
தற்போது இவர்களுக்கு ஆறு வயதுடைய யாழினி என்ற மகளும் இருக்கிறார். குடும்பத்தகராறு காரணமாக தம்பதிகள் அவ்வப்போது சண்டையிட்டு வந்த நிலையில், இருவரும் கடந்தாண்டு பிரிந்ததாக தெரிய வருகிறது.
இதனையடுத்து மருதவள்ளி தனது மகள் யாழினியுடன் வசித்து வந்த நிலையில், திருத்தங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து மகளை கவனித்து வந்துள்ளார்.
சிறுமி யாழினி அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மகள் யாழினியை மதிய உணவு இடைவேளையின் போது வீட்டிற்கு அழைத்து வந்த மருதவள்ளி, வீட்டில் குழந்தையின் மீதும் - தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.
உடலில் தீப்பிடித்து அலறிய நிலையில், அங்கு அக்னி புத்திரனின் சகோதரர் ஈஸ்வரன் இருவரையும் காப்பாற்ற முயற்சித்து இருக்கிறார். அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது, நிகழ்விடத்திலேயே தாய் மகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விஷயம் குறித்து சிவகாசி கிழக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்-மகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.