என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
விவேக் எக்ஸ்பிரஸ் இரயில் எஞ்சின் பைலட் மாரடைப்பால் மரணம்; பணியின்போது நேர்ந்த சோகம்.!

அசாம் மாநிலத்தில் உள்ள கௌகாத்தி நகரில் இருந்து, கன்னியாகுமரி நோக்கி பயணம் செய்யும், இந்தியாவின் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளும் விவேக் எக்ஸ்பிரஸ் இரயில், நேற்று அதிகாலை சுமார் 12:12 மணியளவில், கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது.
காலி பெட்டியுடன் 12:45 மணிக்கு, சுத்தம் செய்யும் பணிமனைக்கு, நாகர்கோவில் இரயில் நிலைய சந்திப்புக்கு சென்றது. அங்கு இரயிலின் பைலட் மோகன், உதவி பைலட் பிரதீப் பணியில் இருந்தனர்.
பணியில் நேர்ந்த சோகம்
பைலட் மோகன் இரயில் எஞ்சினில் இருந்து கீழே இறங்கியபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்தார். அவரை உடன் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சாப்பிட உணவுக்கு பில் கொடுக்க வந்தவர் மாரடைப்பால் பலி.. வருந்தவைக்கும் காட்சிகள்.!
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், பிரதீப்பின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் சக பணியாளர்கள் இடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஆரணி அரசு மருத்துவமனை அலட்சியத்தால் பறிபோன உயிர்.. 8 மாத கைக்குழந்தை, மனைவி பரிதவிப்பு.!