தொலைந்து போன சாவி.! வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம்.! எங்கு தெரியுமா.?



vote counting delay

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று  முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. 

இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் புனித வளனார் பள்ளி மையத்தில் மின்னணு இயந்திரங்கள் உள்ள அறையின் சாவி இல்லாததால் வாக்கு எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அதன் சாவி கிடைக்காததால் முகவர்கள் முன்னிலையில் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

அதேபோல் விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி பேரூராட்சிக்கான தபால் ஓட்டுப்பெட்டியின் சாவி இல்லாததால் முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டது. அதன்பின் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.