தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது.! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!



votes counting cannot be banned

தமிழகத்தில் வருகின்ற மே 2ம் தேதி அன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை ரத்து செய்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி ஏப்ரல் 23ம் தேதி அன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் மனு அளித்திருந்தார்.

மேலும், பணப்பட்டுவாடா புகாரில் தேர்தலின் போது 430 கோடி ரூபாயை வரை தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம்  பறிமுதல் செய்துள்ளதால், மே 2 ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று வந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை மே 2-ம் தேதி எண்ணுவதற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. மேலும் பணப்பட்டுவாடா தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரியதும் நிராகரிக்கப்பட்டுள்ளது.