மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மருத்துவமனையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வார்டு பாய்க்கு கடுங்காவல் தண்டனை விதிப்பு!
மருத்துவமனையில் காத்திருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாய்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே நிகழ்கிறது.
அந்த வகையில் கடந்த 2017ம் ஆண்டு தந்தையின் அறுவை சிகிச்சையின் போது மகள் அருகிலுள்ள அறையில் காத்திருந்துள்ளார். அப்போது அங்கிருந்த 48 வயதான வார்டு பாய் வெங்கடேசன் அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் வார்டு பாயை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் வார்டு பாய்க்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.