குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
எச்சரிக்கை! டெங்கு காய்ச்சல் எதிரொலி.. சிறுவன் உயிரிழப்பு..!
திருவண்ணாமலை மாவட்டம் இருங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் மாயகிருஷ்ணன் . இவருக்கு 12 வயதில் மோகன்தாஸ் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மோகன்தாசிற்க்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் மோகன்தாஸை அனுமதித்துள்ளனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மோகன்தாஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன்தாசிற்க்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது பரிசோதனையின் முடிவில் உறுதியானது. இதனைத் தொடர்ந்து மோகன்தாஸிர்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.