மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எச்சரிக்கை.. வங்கி மேலாளர் போல் பேசி ஆசிரியரின் வங்கி கணக்கில் இருந்து 2 தவணையாக 1.50 லட்சம் பண மோசடி..!
சென்னை ஓட்டேரி பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்று தனியார் பள்ளி ஆசிரியர். சம்பவத்தன்று இவரது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வங்கி மேலாளர் போல் பேசி ஏடிஎம் கார்டு காலாவதியாகி விட்டதாக கூறியுள்ளார்.
பின்னர் எதிர்முனையில் பேசிய அந்த நபர் ஏடிஎம் கார்டில் உள்ள எண்களைக் கூற சொல்லி otp எண்ணையும் ஆசிரியரிடமிருந்து வாங்கிக்கொண்டு அவரது வங்கிக் கணக்கில் இருந்து 2 தவணையாக 1.50 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியர் உடனடியாக ஓட்டேரி காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.