மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எச்சரிக்கை!! சார்ஜில் இருந்த ஃபோன் வெடித்து சிதறி 3 பேர் படுகாயம்..உறவினர் வீட்டுக்கு சென்ற இடத்தில் நடந்த விபத்து.!
திண்டுக்கல் மாவட்டம் இடயக்கோட்டை அருகிலுள்ள இளந்தாரியூரில் வசித்து வருபவர் சந்துரு. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சந்துருவின் வீட்டிற்கு அவரது உறவினர்களான வேலுச்சாமி மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவர் விருந்தினர்களாக வந்து தங்கியுள்ளனர்.
இதனையடுத்து அன்று இரவு மூவரும் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கி இருக்கின்றனர். தூங்கும் முன் சந்துரு கைபேசியை தன் அருகில் உள்ள பிளக் போர்டில் சார்ஜில் வைத்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக இரவு ஃபோன் வெடித்து சிதறியதில் தீ பொறியானது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவரின் ஆடை மேலும் பட்டு எரிய தொடங்கியது. இதனை அறிந்த அவர்கள் தப்பிக்க முயற்சி செய்து கூச்சலிடுள்ளனர்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து அவர்கள் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவர்கள் மூவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஜார்ஜில் இருந்த செல்போன் வெடித்து மூவர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.