உத்தரவை மீறி பள்ளி, வணிக வளாகங்கள் திறக்கப்பட்டால் என்ன தண்டனை? அரசு அதிரடி நடவடிக்கை!



warning to Schools and Malls

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. உயிரைக் குடிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு,  தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சீனாவில் துவங்கி உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை தனியொரு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் மருத்துவர்கள் தங்களால் முயன்ற அளவிற்கு சிகிச்சை கொடுத்து பல உயிர்களை காப்பாற்றி வருகின்றனர். கொரோனா பரவாமல் தடுக்க இந்திய சுகாதாரத்துறை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

corona

அதேபோல், தமிழகத்திலும் சுகாதாரத்துறை பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் கொரோன குறித்து பீதியை கிளப்பவேண்டாம் என எச்சரித்தும் வருகின்றனர். இந்தநிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழகம் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், திரையரங்கம் உள்ளிட்டவை இன்று முதல், வரும், 31ம் தேதி வரை மூட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 இந்நிலையில், அரசின் உத்தரவை மீறி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும், பள்ளிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், ஜிம்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவை திறக்கப்பட்டால், அந்த நிறுவனங்கள் நிரந்தரமாக மூடி, 'சீல் வைக்கப்படும் என, மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.