#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபாகரன் இறந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது; இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் திட்டவட்டம்..!!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரிழந்த விவகாரத்தில் அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி தனியார் செய்தி சேனல் ஒன்றில் கூறியுள்ளார்.
உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழநெடுமாறன் தஞ்சாவூரில் செய்தியாளர் சந்திப்பில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் பிரபாகரன் இருக்கும் இடத்தை இப்போது கூற முடியாது என்றும், அதை பிரபாகரனின் அனுமதியுடன் வெளிப்படுத்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக உள்ளதால் இந்த தகவலை கூறுகிறேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது பல சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்ததாகவும் அவர் உயிருடன் இல்லை எனவும் இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிக்கேடியர் ரவி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பிரபாகரனின் டிஎன்ஏ அறிக்கை முதல் எல்லா ஆதாரமும் எங்களிடம் உள்ளது. எனவே பழநெடுமாறன் எதன் அடிப்படையில் அப்படி கூறினார் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து எங்களுக்கு தகவல் வந்துள்ளது விரைவில் இலங்கை வெளிவரவுத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக இதற்கு பதில் அளிப்பார் எனவும் இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளை ஒன்றிணைத்து தமிழர்களுக்கான தமிழ் நாடு வேண்டி போர் நடந்து வந்தது. இந்த போரில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் முன்னின்று ஆயுதம் ஏந்தி நடத்தினார்.
சிங்கள ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் நடந்த இறுதி கட்டப் போர் 2009 ஆம் வருடத்தில் முடிவுக்கு வந்தது முள்ளிவாய்க்காலில் நடந்த இந்த போரில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் தளபதிகள் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவரின் மரணம் குறித்து மக்களிடையே மாறுபட்ட தகவல் நிலவி வருகிறது.