35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
தமிழக மக்களுக்கு இன்பச் செய்தி! இனி அதற்காக எங்கும் அலைய வேண்டாம்
புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் இறந்தவர்கள் குறித்து அரசு சான்றிதழ் பெற இதுநாள் வரை மக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலையும் சூழ்நிலை இருந்து வந்தது. மக்களின் இந்த சுமையை போக்க crstn.org என்ற இணையதளம் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது.
பிறப்பு, இறப்பு பதிவுச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய புதிய இணையதளம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வகத் தகவல் மேலாண்மை அமைப்பினை தொடங்கி வைத்தார். crstn.org என்ற இணையதளம் மூலம் 21 நாட்களில் இந்த சான்றிதழ்களை இலவசமாக மக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கான சான்றிதழ், அந்த குழந்தையின் தாய், மற்றும் குழந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும் நாள் அன்று கையோடு வழங்கப்படும் என்றும். தனியார் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கான சான்றிதழ்களை பெற்றோர்கள் 21 நாட்களுக்கு பின், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கான முழுமையான சேவையை ஆன்லைனில் வழங்கும் முதல் மாநிலம் தமிழகம் தான். இந்த சான்றிதழ்களை மக்கள் எவ்வித சிக்கல் இன்றி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.