திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழக அரசு பணியாளர்களுக்கு குட் நியூஸ்.. எந்தெந்த நாட்களில் விடுமுறை எடுக்கலாம்?.. பட்டியலை வெளியிட்ட அரசு..!!
தமிழக அரசு பணியாளர்கள் தொற்றுக் காலங்களில் எவ்வாறான வகையில் விடுமுறை எடுக்கலாம் என்பது தொடர்பான தகவல் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அரசு பணியாளர் கொரோனாவால் தனிமைப்படுத்தப்படும் பட்சத்தில் 21 நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் யாருக்கேனும் கொரானா தொற்று அறிகுறி இருந்தால், அவர்களும் 21 நாள் விடுப்பு எடுக்கலாம்.
தற்போது அம்மை மற்றும் தட்டம்மை பரவக்கூடிய காலங்கள் என்பதால், அது குறித்த அறிகுறி அல்லது பரவல் இருந்தால் ஏழு நாட்கள் வரை விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும், பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டால் ஏழு நாட்கள் முதல் 10 நாட்கள் வரையிலும் விடுமுறை எடுத்துக் கொள்ளவும் அறிவித்தப்பட்டுள்ளது.
பிளேக் நோய் ஏற்பட்டால் பத்து நாட்கள் வரையிலும், ரேபிஸ் நோய்க்கு பத்து நாட்கள் வரையிலும், புற்றுநோய் மருத்துவத்திற்கு 10 நாட்கள் வரையிலும் விடுமுறை எடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.