1000 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி ஆற்றில் கொட்டிய மர்ம நபர்கள்: காரணம் புரியாமல் விழிபிதுங்கும் போலீசார்..!



who smuggled 1000 kg of ration rice and dumped it in the river

வேளாங்கண்ணி அருகே சுமார் 1 டன் எடையுள்ள ரேஷன் அரிசி ஆற்றில் கொட்டப்பட்டுள்ளது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள சின்னத்தும்பூர் ஊராட்சி பகுதியிலுள்ள மறவானற்றில் 1000 கிலோ ரேஷன் அரிசி குவியலாக கொட்டி கிடந்துள்ளது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு‌ தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த கீழ்வேளூர் வட்டாச்சியர் ரமேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 1000 கிலோ அளவிலான ரேசன் அரிசி ஆற்றில் கொட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அரிசி எந்த நியாயவிலை கடையில் இருந்து மர்ம நபர்களால் கொண்டு வரப்பட்டு ஆற்றில் கொட்டப்பட்டது, என்பது குறித்து வேளாங்கண்ணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.