மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தி.மு.க பிரமுகரின் உடலை எட்டு துண்டாக வெட்டி வீசியது ஏன்?..கொலையாளிகள் பரபரப்பு வாக்கு மூலம்..!
சென்னையை சேர்ந்த தி.மு.க பிரமுகரை எட்டு துண்டுகளாக வெட்டி இதயம் நுரையீரல் மற்றும் உடல் பாகங்களை காசிமேடு கடலில் வீசிய சம்பவம் தொடர்பாக கொலையாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் கொலையாளிகள் அளித்த வாக்கமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மணலி சார்ந்த திமுக பிரமுகரான சக்கரபாணி பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அவர் தமீம் பானு என்ற 22 வயதான பெண்ணிற்கு பைனான்ஸ் கொடுத்துள்ளார். அதன்மூலம் தமிழ் பானுவை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்திருக்கிறார்.
60 வயதான சக்கரவர்த்தியின் தொடர்பை தவிர்ப்பதற்காக தமீம் பானு வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்து உள்ளார். புதிதாக குடியேறிய வீட்டிலும் சக்கரபாணியின் தொல்லை தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் புதிதாக குடியேறிய இடத்தில், கீழ் வீட்டில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுனருடன் தமீம் பானுவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
தமீம் பானுவும் அவரது சகோதரர் வாஷிங் பாஷாவும் சக்கரபாணியை கொலை செய்து ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்துள்ளனர். தமீம் பானுவின் கணவர் அஸ்லாம் உஜைனியிடமும், தனது இரு பெண் குழந்தைகளிடமும் பூட்டிய அறையில் இருந்த சக்கரபாணியின் சடலத்தை காண்பித்து அங்கிள் உடல்நலக்குறைவால் தூங்குகிறார் அவருக்கு ஓதி உள்ளதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அந்த அறையை பூட்டி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மறுநாள் வாசிம் பாஷா கடைக்குச் சென்று பெரிய அளவிலான கசாப்புக்கடை கத்திகள் இரண்டை வாங்கிவந்து வீட்டைப் பூட்டிவிட்டு சக்கரபாணியின் உடலை பாத்ரூமில் வைத்து கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார். பின்னர் உடலை இரண்டு துண்டுகளாகவும், கால் பாதங்களை தனியாகவும், என மொத்தம் எட்டு துண்டுகளாக வெட்டி வைத்து அவற்றை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைத்துள்ளான்.
பின்னர் இந்த விவகாரம் குறித்து தமீம் பானுவின் புதுக் காதலன் ஆட்டோ ஓட்டுனர் டில்லிபாபுவிடம் தெரிவித்து உதவி கேட்டுள்ளான், பிறகு டில்லி பாபுவும், வாசிம் பாஷாவும் சேர்ந்து ஆட்டோவில் சக்கரபாணியின் தலையை போர்வையில் சுற்றி அடையாறு ஆற்றில் வீசியுள்ளனர்.
பின்னர் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இதயம் நுரையீரல் குடல் பகுதியை கவரில் அடைத்து வைத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கல்லில் கட்டி கடலில் தூக்கி வீசியதாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து கொலைக்கு பயன்படுத்திய 2 பெரிய கத்தி மற்றும் ஒரு கத்தரிக்கோலை காவல்துறையினர் பறிமுதல் செய்து கைதான தமீம் பானு, வாசிம் பாஷா, டில்லிபாபு, ஆகிய மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அடையாறு ஆற்றில் வீசப்பட்ட சக்கரபாணியின் தலையை மூன்றாவது நாளாக தீயணைப்புத் துறையினர் உதவியுடன் காவல்துறையினர் தீவிரமாக தேடியும் கிடைக்காத நிலையில், 10 கிலோ எடையுள்ள மனிதத் தலை போன்ற டம்மி ஒன்றை தயார் செய்து, கொலையாளிகள் வீசிய ஆற்றுக்குள் கயிறு கட்டி வீசி அது எந்த திசையை நோக்கி நகர்கிறது என்பதை வைத்து, சக்கரவர்த்தியின் தலையை தேடி கண்டுபிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.