மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவருடன் தகாத உறவு வைத்த கள்ளக்காதலியை கத்தியால் குத்திய மனைவி!
திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி தாலுக்கா கோத்தாண்ட பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு சௌந்தரி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் ஆறுமுகம் அதே பகுதியை சேர்ந்த வள்ளி என்ற நபருடன் தகாத உறவு வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த சௌந்தரி வள்ளியை கண்டித்துள்ளார்.
ஆனால் இதனை கண்டு கொள்ளாத வள்ளி, ஆறுமுகத்துடன் தொடர்ந்து தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சௌந்தரி நேற்று முன்தினம் வள்ளியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சௌந்தரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வள்ளியின் கழுத்து மற்றும் வயிற்றில் குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த வள்ளி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள், சௌந்தரி தப்பியோடி விட்டார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த வள்ளியை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே தப்பியோடிய சௌந்தரி கத்தியுடன் அம்பலூர் போலீசில் நேற்று சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சௌந்தரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.