திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மது போதையில் டார்ச்சர் செய்த கணவன்.. ஆத்திரத்தில் நடந்த விபரீத சம்பவம்.!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொசவன் கரடு பகுதியை சேர்ந்தவர் சக்தி. இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். மது போதைக்கு அடிமையான சக்தி தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி மணிமுடியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது போதையில் மண்ணெண்ணையை எடுத்து மனைவி மற்றும் குழந்தை மீது ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளார்.
இதனிடையே சுதாரித்துக் கொண்ட மனைவி மணிமுடி மண்ணெண்ணெய் கேனை தட்டி விட்டுள்ளார். இதனால் ஆவேசமடைந்த சக்தி கடப்பாரையை எடுத்து மனைவியை தாக்க முயன்றுள்ளார்.
அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் மனைவி மணிமுடி கடப்பாரையை பிடுங்கி கணவரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணி முடியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.