மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரியலூரில் பரபரப்பு... மனையின் கள்ளக்காதலை கண்டித்த கணவர்... ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர சம்பவம்!!
அரியலூர் மாவட்டம் வடகடல் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் - அனுப்பிரியா தம்பதியினர். சுரேஷ் சென்னையில் வேலை பார்த்து வரும் நிலையில் மனைவி மட்டும் வடகடல் பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்போது அனுப்பிரியாவுக்கும் அவரது உறவினரான வேல் முருகன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
கணவன் ஊரில் இல்லாததால் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசம் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கணவர் சுரேஷ்க்கு தெரியவரவே மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனுப்பிரியா கணவரை ஏதோ காரணம் கூறி சென்னையிலிருந்து அழைத்துள்ளார்.
பின்னர் கள்ளக்காதலன் வேல் முருகன் உதவியுடன் சுரேஷை துடிதுடிக்க வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் உடலை வனத்துறையினருக்கு சொந்தமான வெண்மான் கொண்டான் முந்திரி தோப்பில் வைத்து எரித்துள்ளனர். ஆனால் சரியாக எரியாமல் இருந்த உடலை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சடலமாக கிடந்தவர் சுரேஷ் என்பதும் அவரை கொலை செய்தது அனுப்பிரியா மற்றும் வேல் முருகன் என்பதும் தெரியவந்துள்ளது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.