மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பர்தா அணியாமல் வெளியே சென்ற மனைவி படுகொலை.! பணத்தை திருடிக் கொண்டு தப்பிய கணவன்.!
சென்னையில் மனைவி பர்தா போடாமல் பக்கத்து வீட்டுக்கு சென்றதால் பிரியாணி கரண்டியால் தலையில் வேகமாக அடித்துள்ளார் அவரது கணவர். சுயநினைவை இழந்த அந்தப் பெண் இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அயனாவரத்தில் அமைந்திருக்கும் வசந்தா கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் சையத் அலி பாத்திமா(36). திருமணத்தில் நாட்டம் காட்டாத இவர் பெற்றோரின் விருப்பத்திற்காக இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய ரவிக்குமார் என்கிற உமரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.
கீழ்கட்டளை பகுதியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வருகிறார் உமர். அவருக்கு சம்பளம் போதிய அளவு இல்லை என்பதால் பாத்திமாவின் தாய், அவர்களுக்கு பொருள் உதவி செய்து வந்துள்ளார். வேலைக்கு சரியாக செல்லாததால், உமருக்கும் பாத்திமாவுக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் இருந்து வந்துள்ளன. ஒன்பதாம் தேதி பாத்திமாவின் தாய் பல்கீஸ், பாத்திமாவுக்கும் உமருக்கும் தனியாக வீடு ஒன்றை பார்த்து வசந்தா கார்டன் பகுதியில் குடியமர்த்தி உள்ளார்.
சம்பவ தினத்தன்று புதிதாக குடி பெயர்ந்த வீட்டில் பால் காய்ச்சி உள்ளார் பாத்திமா. காய்ச்சிய பாலை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுப்பதற்காக பாத்திமா சென்றுள்ளார். அப்போது பர்தா அணியாமல் சென்றதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் பாத்திமாவை பிரியாணி கரண்டி வைத்து தலையில் பலமாக தாக்கியுள்ளார். பின்னர் பாத்திமாவின் பையில் இருந்து 2500 ரூபாயை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த பாத்திமாவை மீட்டு அவரது குடும்பத்தினர் ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இரண்டு நாட்களாக சுயநிலையை இழந்த பாத்திமா, தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உமரை கைது செய்தனர்.