மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலை தட்டிக் கேட்ட மனைவி... விஷ ஊசி போட்டு கொலை செய்ய முயன்ற கணவன் கைது...!!
பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக, கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். தனியார் ஆஸ்பத்திரியில் உணவக மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா. மகன் சாய் சர்வேஷ். இவர் தனது குடும்பத்தினருடன் அன்னூர் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள செந்தாம்பாளையத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரீதரனுக்கும், அவருடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதை ஸ்ரீதரன் மனைவி கீர்த்தனா கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிகும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீதரன் கீர்த்தனாவை தாக்கியுள்ளார்.
இந்தநிலையில் கீர்த்தனா கண்ணூர் காவல் நிலையத்தில், கள்ளக் காதல் விவகாரத்தில் கணவர் உட்பட மூன்று பேர் தனக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் ஸ்ரீதரன், அவரின் கள்ளக் காதலி ரம்யா, நண்பர் பழனி மூன்று பேரும் சேர்ந்து கீர்த்தனாவுக்கு விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து காவல் துறையினர் ஸ்ரீதரனை கைது செய்தனர்.
இந்நிலையில் தலைமறைவான ரம்யா மற்றும் பழனியை காவல் துறையினர் தேடி வந்தனர். ரம்யா, பழனி இரண்டு பேரும் கோவை சின்னியம் பாளையம் ஆர்.ஜே.புதூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற அன்னூர் காவல் துறையினர் ரம்யா, பழனி இருவரையும் கைது செய்தனர்.