#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் படுகொலை... குற்றவாளியை வலை வீசி தேடும் காவல்துறை.!
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட பெண் இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடற்கரை நோக்கி செல்லும் சென்னை புறநகர் ரயிலில் ராஜேஸ்வரி என்ற பெண் பழ வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த நிலையில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கினார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேஸ்வரியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வந்த போலீசார் இரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதாக தெரியவந்திருக்கிறது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரி இன்று அதிகாலை பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.