திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கந்து வட்டி தகராறு... கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்.!! காவல்துறை தீவிர விசாரணை.!!
திருவாரூர் மாவட்டத்தில் கந்து வட்டி பிரச்சனை தொடர்பாக 55 வயது பெண் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தப்பியோடிய குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கந்து வட்டி கடன்
திருவாரூர் மாவட்டம் சோனா பேட்டை பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவர் கந்து வட்டி தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த இந்துமதி என்ற பெண் காந்தியிடம் 9 லட்சம் ரூபாய் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார். மேலும் இந்துமதி தான் வாங்கிய முழு கடன் தொகையையும் வட்டியுடன் 20 லட்ச ரூபாயாக திருப்பி செலுத்தி இருக்கிறார்.
கடன் பத்திரம் தொடர்பாக தகராறு
வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து முழுத் தொகையையும் திருப்பி செலுத்திய நிலையில் கடன் பத்திரத்தை வழங்க மறுத்திருக்கிறார் காந்தி. இது தொடர்பாக காந்தி மற்றும் இந்துமதி இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்திய போதும் தனது கடன் பத்திரத்தை இந்துமதி திருப்பி கேட்டிருக்கிறார். ஆனால் காந்தி அந்த பத்திரத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்திருக்கிறார். இது தொடர்பாக இருவர் இடையே பிரச்சனை நீடித்து வந்திருக்கிறது.
இதையும் படிங்க: திருச்சியில் பயங்கரம்.!! 94 வயது மூதாட்டி கொடூர கொலை.!! பேரன் தப்பியோட்டம்.!!
டிராக்டர் ஏற்றி படுகொலை
இந்நிலையில் இந்துமதி தொடர்ந்து கடன் பத்திரத்தை கேட்டு வந்ததால் ஆத்திரமடைந்த காந்தி அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில் நின்று கொண்டிருந்த இந்துமதி மீது டிராக்டரை வைத்து ஏற்றி படுகொலை செய்திருக்கிறார் காந்தி. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் இந்துமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை குற்றவாளி காந்தியை தேடி வருகிறது .
இதையும் படிங்க: காலாவதியான செய்தியாளர் ஐ.டி கார்டுடன் மசாஜ் சென்டரில் அடாவடி; இளைஞர் கும்பலை வறுத்தெடுத்த ஒரிஜினல் செய்தியாளர்கள்..!