#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"இனி குடிச்சிட்டு வருவ.." போதையில் உறங்கிய கணவனுக்கு கொதிக்கும் எண்ணெயில் அபிஷேகம்.!! மனைவி கைது.!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் சமையல் எண்ணெய் ஊற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கணவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மனைவியை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
காதல் திருமணம்
புதுநல்லூர் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி ரவி(45). இவரது மனைவி ஜெயந்தி. ரவி மற்றும் ஜெயந்தி ஆகியோர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் தனியாக வசித்து வரும் நிலையில் ரவியின் குடிப்பழக்கம் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது. தினமும் குடித்துவிட்டு வரும் ரவி தனது மனைவியை சித்திரவதை செய்திருக்கிறார்.
கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ஜெயந்தி
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மது அருந்தி விட்டு வந்த ரவி தனது மனைவி ஜெயந்தியிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் ஜெயந்தியை அடித்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரத்திலிருந்த ஜெயந்தி, ரவி உறங்கிக் கொண்டிருக்கும் போது அவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி இருக்கிறார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ரவி வலியால் அலறி துடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையும் படிங்க: அட கொடுமையே... 16 வயசு பொண்ணுக்கு பாலியல் தொல்லை.!! தமிழாசிரியர் கைது.!!
மனைவி கைது
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகாரளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ஜெயந்தியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர. படுகாயமடைந்த ரவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: போதையில் தந்தைக்கு அடி... தடுக்க வந்த அண்ணன் படுகொலை.!! குடிகார தம்பி கைது.!!