மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடன் நெருக்கடி! பசியால் துடித்த குழந்தைகள்! தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியைப் போக்கிய தாய்!
சேலம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். செல்வம் குடும்ப வறுமை காரணத்தால் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக செல்வம் 7 மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.
இந்தநிலையில், செல்வத்தின் மனைவி பிரேமா தனது மூன்று குழந்தைகளுடன் செங்கல் சூளையில் வேலை செய்து, வாழ்ந்து வருகிறாா். இந்த வறுமையிலும் செல்வத்திடம் கடன் கொடுத்தவா்கள் அவரின் மனைவி பிரேமாவிடம் சென்று கடனைத் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்து வந்தனா். இதனால் செங்கல் சூளையில் சம்பாதித்த பணத்தை கடன்காரர்களுக்கு வட்டி மட்டுமே காட்டிவந்த நிலையில் குழந்தைகளின் பசியைப் போக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.
குழந்தைகள் பசியால் துடித்ததால் விரக்தியடைந்த பிரேமா தலைமுடியை விற்க முடிவு செய்தார். அதன்படி அவரது தலைமுடியை எடைக்கு கொடுத்து அதன் மூலம் வந்த 150 ரூபாய் பணத்தை வைத்து குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து பசியை போக்கினார்.
இதனையறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் பிரேமாவை சந்தித்து உணவு வழங்கினர். மேலும் பேஸ்புக்கிலும் பிரேமாவின் வறுமை குறித்து பதிவிட்டனர். இதன் மூலம் ரூ.1 லட்சம் கிடைத்தது. மீதமுள்ள பணத்தை சமூக ஆர்வலர்கள் ஏற்பாடு செய்து பிரேமாவிற்கு கடன் கொடுத்தவரிடம் வழங்கினர்.