மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் எஸ்.ஐ தற்கொலை முயற்சி... காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை.!
புதுக்கோட்டையில் காவல்துறை உதவி ஆய்வாளர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சங்கீதா. புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவிக்கு ஆதரவாக கலில் என்ற வழக்கறிஞர் ஆஜராகி இருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணின் கணவர் வழக்கறிஞரை மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக திருகோகர்ணம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரான சங்கீதாவிடம் புகார் அளித்தார் வழக்கறிஞர் கலில்.
மேலும் அவர் பதிந்த வழக்கு தொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக காவல்துறை சமரசம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று உறுதியளித்த பின்னரே போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து இருக்கிறார் உதவி ஆய்வாளர் சங்கீதா.
இதனைத் தொடர்ந்து காவல்துறையின் வருகை பதிவேட்டில் வழக்கறிஞர் கலில் தனக்கு மன அழுத்தம் கொடுத்ததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்ற சங்கீதா அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட சக காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வருகை பதிவேட்டை கைப்பற்றிய காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.