மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#வீடியோ: இளம் பெண்ணை கம்பால் தாக்கிய மேலாளர்..!! வைரலாகும் வீடியோ காட்சி..!
வேலைக்கு வரமறுத்ததால் இளம் பெண்ணை தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் கம்பால் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
கோயம்பத்தூர் மாவட்டம் சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்றில் வடமாநிலத்தை சேர்ந்த 800 கும் அதிகாமானோர் அங்கையே தங்கி வேலை பார்த்துவருகின்றனர். இந்நிலையில் அந்த மில்லில் வேலை பார்த்துவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலைக்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் நிறுவனின் மேலாளர் முத்தையா என்பவரும், காப்பாளர் லதா என்பவரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணை கம்பால் தாக்கியதாக கூறப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், முத்தையா மற்றும் லதா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
குறிப்பிட்ட பெண் தொடர்ந்து மூன்று நான்கு நாட்களாக வேலைக்கு வர மறுத்ததாகவும், இதுகுறித்து கேட்க சென்றபோது, அந்த பெண் தங்களை தாக்கியதாலையே, பதிலுக்கு தாங்களும் தாக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.