மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கரும்பு காட்டுக்குள் நிர்வாணமாக கிடந்த பெண்ணின் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை கரும்பு வெட்டும் கூலி தொழிலாளர்கள் கரும்பு அறுவடைக்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கே கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள் தோட்டத்தின் மையப்பகுதியில் சென்று பார்த்தனர். அப்போது அங்கே நிர்வாணமாக அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து பழனிவேல் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் தண்டராம்பட்டு ஊராட்சி டேம் ரோடு பகுதியை சேர்ந்த சங்கர் மகள் ராஜேஸ்வரி என்பது தெரிய வந்தது. மேலும் ராஜேஸ்வரி கடந்த மார்ச் ஒன்பதாம் தேதி முதல் காணவில்லை என்று போலீசின் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இளம் பெண்ணின் உடல் நிர்வாணமாக வீசப்பட்டுள்ளதால் அவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என விசாரணை நடத்தி வருகின்றனர்.