திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற பெண்ணை நடுரோட்டில் இறக்கிவிட்ட நடத்துனர்!
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் நவலை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மனைவி பாஞ்சாலை. இவர் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி அரூரில் மாட்டு இறைச்சி வாங்கிக்கொண்டு நவலைக்கு அரூர் பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.
இதில் மாட்டிறைச்சி வைத்ததை கண்ட நடத்துனர் மற்றும் ஓட்டுநர் அந்த பெண்ணை நடு வழியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அன்று இரவு ஒன்பது முப்பது மணிக்கு நவலைக்கு வந்த பேருந்தை மறித்த அதே பகுதியை சேர்ந்த சில நடத்துனர் மற்றும் ஓட்டுனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில் நடத்துனர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக புது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே பாஞ்சாலை அளித்த புகாரின் அடிப்படையில் ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துனர் ரகு மீது எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.