திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவரா நீங்கள்..?!!:அப்ப உடனே இதை செய்யுங்க..!!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்படும் என்று நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசு அறிவித்து இருந்தது.
இந்த திட்டத்தில் சேர மொத்தம் ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவற்றில், சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் தகுதி இல்லாதவை என்று கூறி நிராகரிக்கப்பட்டன. மீதம் இருந்த, ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் தகுதிவாய்ந்தவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 15 அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது. இ-சேவை மையங்களின் மூலம் மீண்டும் தங்கல் விண்ணப்பத்தை அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.