#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யோகா தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இனிப்பான செய்தி!
பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை பள்ளியிலேயே யோகா சொல்லித் தரப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரண கர்த்தாவாக இருந்தவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
இதனை தொடர்ந்து இந்த ஆண்டு இன்றைய நாளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற யோகா தினத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "மதம் - மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும். கவனச்சிதறல் இன்றி கல்வி கற்க மாணவர்களுக்கு யோகா உதவுகிறது. எனவே பள்ளிகளில் வாரம் ஒரு முறை யோகா பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.