மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!
தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் என்ற வாலிபர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் கேஷியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் திருச்சியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியிடம் ஆசைவார்த்தைகளை கூறி கடந்தவாரம் மணப்பாறை அயன்புரம் பகுதிக்கு அழைத்துச்சென்று பள்ளி மாணவியுடன் தங்கியுள்ளார்.
பள்ளி மாணவி மயமானதால் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவியை மகேந்திரன் அழைத்து சென்றதும், மணப்பாறை அயன்புரம் பகுதியில் பள்ளி மாணவியுடன் மகேந்திரன் தங்கி இருந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.