மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளிக்கூடத்தில் வைத்து மாணவியை கத்தியால் குத்திய வாலிபர்.! அதிர்ச்சி சம்பவம்.!
நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 12- ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது ஆசிக் என்ற இளைஞர் அந்த மாணயை தொடர்ந்து வந்துள்ளார். பின்னர் மாணவியை சந்தித்துப் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென ஆசிக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அந்த மாணவியின் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மாணவி அலறல் சத்தம் போட்டுள்ளார். மாணவியின் அலரல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், அந்த இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து கயிற்றில் கட்டிவைத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
காயமடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிக்கை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.