மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தண்டவாளத்தில் தூங்கிய நண்பர்கள்: ரெயில் மோதியதில் சிறுவன் பரிதாப பலி, 2 பேர் படுகயம்!..பதற வைக்கும் சம்பவம்..!
நான்கு நண்பர்கள் ரெயில்வே தண்டவாளத்தில் படுத்து தூங்கியபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா வடலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் மணிகண்டன் (15). வடலூர் நகராட்சி ஜோதி நகரை சேர்ந்த ராமர் மகன் சஞ்சய் (22), புதுநகர் சக்திவேல் என்பவரது மகன் சுரேந்தர் என்கிற சூர்யா (15). நெய்வேலி இந்திராநகர் ஆர்ச் கேட் பகுதியை சேர்ந்த மோகன் மகன் பார்த்திபன் (29). நண்பர்களான இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு வடலூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னர் நண்பர்கள் அனைவரும் ரயில்வே தண்டவாளத்திலேயே படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இரவு சுமார் 10. 35 மணிக்கு வடலூரிலிருந்து நெய்வேலிக்கு நிலக்கரி ஏற்றி சென்ற ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
படுகாயம் அடைந்த சஞ்சய், சுரேந்தர் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ரெயில் வருவதை கவனித்த பார்த்திபன் எழுந்து ஓடி விட்டதால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து சிதம்பரம் ரெயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.