மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலை ஏற்க மறுத்ததால் 16 வயது மாணவியை கத்தியால் சராசரியாக தாக்கிய இளைஞர்... போலீசார் விசாரணை!!
சென்னை மேடவாக்கத்தில்உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஒரு தலை காதலை ஏற்க மறுத்ததால் 16 வயது மாணவியை கத்தியால் குத்தி விட்டு இளைஞர் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனிஷ்கா(16) என்ற மாணவி வண்டலூரில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த வசந்த என்ற இளைஞர் தனது காதலை ஏற்க மறுத்த காரணத்தால் கனிஷ்காவை கத்தியால் சராசரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அதில் கனிஷ்காவிற்கு தலை, தொடை, கைவிரல், முகத்தின் தாடை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
உடனே அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வசந்த் என்ற இளைஞரை தேடி வருகின்றனர்.
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ஒரு தலை காதலால் இளைஞர், மாணவியை கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.